தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும் ஜுன் 22-ம் தேதி பகல் 12 மணிக்கு 2-வது லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார் என்பதை தவிர தளபதி 63 படம் பற்றி பெரிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. தளபதி 63 படத்தில் விஜய்யின் நண்பராக கதிர் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தளபதி 63 பற்றி அப்டேட் கேட்டு கேட்டு கெஞ்சிக் கதறி விஜய் ரசிகர்கள் டயர்டானார்கள். அவர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் அப்டேட் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் அவர்கள் ஒரு முடிவு செய்து பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார்கள்.
நமக்கு தான் ஒரு ஹேஷ்டேகை உருவக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்ய விடுவது கை வந்த கலையாச்சே என்று நினைத்து தளபதி 63 அப்டேட் கேட்டு #WeWantT63ThiruvizhaUpdate என்ற ஹேஷ்டேகை தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில் தளபதி 63 அப்டேட் ஜூன் 19ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், 22ம் தேதி செகண்ட் லுக்கும் வெளியாகும் என்று அர்ச்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



