நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

சற்றுமுன்

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. தற்போது தனியார் நிறுவனமான திருமலா, பால் விலையை ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமுலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமலா நிர்வாகம், பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது மக்கள் விரோத நடவடிக்கை என்றும், உடனடியாக இந்த விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தாா்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.