ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்
திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மின்சார கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்
இலத்தூர் மணிவண்ணன் என்பவரின் மகன் பிரசாந்த் (23) இவர் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளார் ,பாவூர்சத்திரம் ரயில் நிலையம் தாண்டியதும் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது அப்போது ரயில் தண்டவாளத்தின் இடது புறம் இருந்த கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து தென்காசி இரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்
தென்காசி அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்
Popular Categories




