காரசாரமாய் ஒரு கார்ன் கப்ஸ்

சமையல் புதிது சற்றுமுன்

solama - 2026கார்ன் கப்ஸ்:

தேவையானப் பொருட்கள்:

சோளமா- 1 கப் , அரிசிமா- 1 கப்,பொட்டுக்கடலை-50 கிராம், வேர்கடலை-50கி, காரப்பொடி,-1 டேபிள் ஸ்பூன், நெய்- 50 கிராம் உப்பு- தேவையான அளவு, எண்ணெய்- பொறிக்க தேவையான அளவு.

செய்முறை :

பொட்டுக் கடலையை லேசாக அடுப்பில் வைத்து சூடு செய்யவும், வேர்கடலையை சூடு செய்து தோலுரித்து ,இரண்டையும் நைசாக அரைக்கவும்.அரைத்ததை நெய் விட்டு குழைத்துக் கொள்ளவும். அரிசி மா, சோளமா காரப்பொடி உப்பு, இவற்றுடன் குழைத்த கடலையைக் கலந்து தண்ணீர் விட்டு பிசையவும். சீடை போன்று உருண்டையாக உருட்டி,கட்டை விரலால் நடுவில் அழுத்தி ஒரு கப் போல செய்து பொறிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.