prudhvi raj balireddy 30yrs - 2026

டோலிவுட் காமெடியன் ப்ருத்விக்கு ஜெகன் அதிரடி ஆஃபர் அளித்து வலைவிரித்து வருகிறாராம். இது தொடர்பாக, ஆந்திர முதல்வர் ஜெகன் பிரத்விக்கு செய்தி தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனியர் காமெடியன் ஒய்எஸ் கட்சித் தலைவர் பிரத்விக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அளிக்கவிருக்கும் பதவி பலரது கண்களையும் இப்போது உறுத்தியிருக்கிறது.

ஒய்எஸ்பி.,யின் மாநில பொதுச் செயலாளரான தெலுங்கு நகைச்சுவை நடிகர் ப்ருத்வியிடம் அரசு மிக முக்கியமான பதவியை ஒப்படைக்கப் போவதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் எஸ்விபிசி சேர்மனாக ப்ருத்வியை நியமிக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Balireddy Prudhviraj jagan - 2026இது தொடர்பான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதுவரை சேர்மனாக இருந்த பிரபல டைரக்டர் ராகவேந்திர ராவு அந்தப் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.  சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தவுடன் ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வந்த பதவிக்கு குட் பை சொல்லிவிட்டார் ராகவேந்திர ராவ்!

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

வயதாகிவிட்டதால் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் கூறிய நிலையில், 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் பிரத்விக்கு அந்தப் பதவிக்கான ஆஃபர் கிடைத்துள்ளது.  அதை பிருத்வி எப்படி ஏற்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending