இளம் பெண் தற்கொலை ! அழகு நிலையத்தில் அரங்கேறிய அவலம் !

கிரைம் நியூஸ் சற்றுமுன்

beautyparlar 1 - 2026கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த ஷோபானா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பாப்பம்பட்டி பிரிவில் உள்ள பெண்கள் அழகு மையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்னர் ஷோபானாவின் பெற்றோரை தொடர்கொண்ட அழகு நிலைய உரிமையாளர் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடனே அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷோபனாவின் பெற்றோர் செய்வதறியாது உடனடியாக அழகு நிலையம் சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஷோபனா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை அல்ல எனக்கூறி அவரது பெற்றோர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

உடற்கூறு ஆய்வறிக்கை கிடைத்த பின்னரே ஷோபனாவின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்ற காவல்துறையினர் சமரசப் பேச்சை ஏற்க மறுத்த உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வேறுவழியின்றி அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.