காதல் மனைவி கருகி போன பரிதாபம் ! தனக்கான இடத்தை கணவன் இதற்கு கொடுத்தது தான் காரணமா?

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்

fire 1 - 2026திருப்பூரில்  சக்திவேல் மற்றும் ரேணுகா தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஆனந்தமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமூகவலைதளங்களால் விரிசல்கள் எழ ஆரம்பித்தது.

தனக்கான நேரங்களை சமூக வலைதளங்கள் பிடித்துக்கொண்டதாகவும், அதாவது கணவன் சக்திவேல் தன் மேல் அன்பாக இல்லாமல் சமூகவலைதளங்களிலேயே எந்நேரமும் மூழ்கியிருந்ததாகவும் ரேணுகா அடிக்கடி கணவரிடம் குறைபட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சக்திவேல் சமூகவலைதளங்களே கதி என்று இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா தேவி சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.