செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்மன் ஆடிப்பூர வளைகாப்பு உத்ஸவம்!

Published:

sengottai darsamvarthini ambal8 - 2026நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்ஸவம் சனிக்கிழமை இன்று கோலகலமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் புகழ் பெற்று விளங்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

sengottai darsamvarthini ambal7 - 2026இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்கிட வளைகாப்பிற்கான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

sengottai darsamvarthini ambal - 2026இதனைத் தொடர்ந்து  மாலை 6.30 மணி அளவில் அம்பாளுக்கு வளைகாப்பு உத்ஸவம் நடந்தது. அப்போது இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் சுற்றுப் பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

sengottai darsamvarthini ambal3 - 2026ஆடிப்பூர வளைகாப்பு உத்ஸவ பூஜைகளை கோயில் பரம்பரை அர்ச்சகர் கணேச பட்டர் நடத்தி வைத்தார். வளைகாப்பு உத்ஸவ விழாவில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு அம்பாளுக்கு அலங்கரிக்கப்பட்ட பூ, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

sengottai darsamvarthini ambal2 - 2026விழாவில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Related articles

Recent articles

spot_img