காஞ்சி அத்திவரதரை நேற்று ஒரு நாளில் மட்டும் 3 லட்சத்து 75ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 1ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.
முதலில் சயனக் கோலத்தில் தரிசனம் அளித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் தரிசனம் அளித்து வருகிறார்.
40வது நாளான நேற்று வரை அத்திவரதரை 78 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதரின் தரிசன காலம் விரைவில் முடிய இருப்பதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று ஒரே நேரத்தில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அத்திவரதரை தரிசிக்க வருகை தந்தனர்.
இதனை அறிந்த ஆட்சியர் பொன்னையா அனைவருக்கும் அத்திவரதை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.