கோலியை சமன் செய்து… சாதித்த ரோஹித் சர்மா!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு
rohit sharma - 2026

இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார். சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 50 ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

நேற்று, நியூசிலாந்துக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இருபது ஓவர் போட்டிகளில் 21ஆவது அரை சதத்தை பதிவு செய்த ரோகித், ஏற்கெனவே தான் அடித்துள்ள 4 சதங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 25ஆவது முறையாக 50 ரன்களுக்கு மேல் குவித்தார்.

முன்னதாக இப்பட்டியலில் முதலிடம் வகித்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா தற்போது தகர்த்துள்ளார்.

நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்தில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் கோலி!

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கையில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் தோனி!

மே.தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேயில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் சுரேஷ் ரெய்னா!

டி20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்கள்!

2007- பிராட் vs இந்தியா – 36 ரன்கள்
2020- சிவம் துபே vs நியூஸிலாந்து – 34 ரன்கள்
2012- பர்னெல் vs இங்கிலாந்து – 32 ரன்கள்
2012- இஸதுல்லா vs இங்கிலாந்து – 32
2016- ஸ்டூவர்ட் பின்னி vs மே.தீவுகள் அணி – 36

டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்றுள்ள அணிகள்!

நியூஸிலாந்து – 65 போட்டிகள்
இலங்கை – 64 போட்டிகள் போட்டிகள்
மேற்கிந்திய தீவுகள் அணி – 63 போட்டிகள்
வங்கதேசம் – 62 போட்டிகள்
பாகிஸ்தான் – 57 போட்டிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.