spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனை“எனக்கு இந்த 30 சந்தேகம் இருக்கு... தெளிய வைப்பது யார்?”: கேட்பவர் அர்ஜுன் சம்பத்!

“எனக்கு இந்த 30 சந்தேகம் இருக்கு… தெளிய வைப்பது யார்?”: கேட்பவர் அர்ஜுன் சம்பத்!

- Advertisement -

தனக்கு 30சந்தேகங்கள் இருப்பதாகவும் இதனைத் தெளிய வைக்கிறீர்களா என்றும் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன்சம்பத் அறிக்கை வாயிலாக கேட்டிருக்கிறார்.

இனியாவது உணர்ந்து கொள் ஏன் சரியான இந்து சமய தலைமை தமிழனுக்கு வேண்டும் என்று எனக் குறிப்பிட்டு, அவர் எழுப்பியுள்ள 30 கேள்விகள்… இவைதான்!

தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு;
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹ்வையும், அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை!

ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை!

புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் பண்டிகைகள் அல்ல; “விடுமுறை” நாட்கள் மட்டுமே!

பெண்ணடிமைத்தனம் கொண்டது இந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் , ஏழு கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.

சில நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்!

வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் இந்துக்கள் மத வெறியர்கள். ஆனால், வீட்டில் அரபு பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மத சார்பற்றவர்கள்!

ஒரு இந்துத் தமிழன் சபரி மலை, காசி, திருப்பதி போன்ற தலங்களுக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம்; ஆனால், அதே இந்துக்களின் வரிப் பணத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனிதப் பயணம்!

எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால், அது மத பயங்கரவாதம்;
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரக்ணக்கான இந்து அப்பாவிகளைக் கொத்துத் கொத்தாக கொன்றால் அது புனிதப் போர்.

வீட்டில் வேட்டி கட்டி பொங்கலைக் கொண்டாடும் இந்து ‘பார்பனீயத்தின் அடிமை’; ஆனால், வீட்டில் லுங்கி கட்டி, ரம்ஜான் கொண்டாடுபவனும்,
கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனும் ‘தமிழ் தேசிய திலகங்கள்’!

சாதியை ஒழிக்க, சமூக நீதி நிலைக்க,பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மத சார்பு; ஆனால், பல நூறு ஆண்டுகளாக இந்துக்களை ஆண்டு அவர்கள் மீது ‘ஜசியா’ போன்ற வரிகளை மத அடிப்படையில் போட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவது மத சார்பின்மை.

ஒரு கடவுள் கொள்கையுடைய மதம் உயர்ந்தது; ஆனால், அந்தக் கொள்கையை உள்ளடக்கிய (அத்வைதம்) இந்து மதம் கேவலமானது.

சக்தியூட்டப்பட்ட அதிர்வுகளை தாங்கி நிற்கும் விக்ரகங்களை வணங்கினால் அது மூடநம்பிக்கை; ஆனால், விமானத்தில் போய் வெற்றிடத்தை வணங்கி வந்தால் அது புனிதமானது.

மாத்தறையில் எங்காவது ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு மறுக்கப்பட்டால் அது மத வெறி; ஆனால் மட்டக்களப்பு அம்பாறையில் பல ஆயிரம் இந்துக் குடும்பங்கள் முஸ்லிம்களால் விரட்டப்பட்டால் அது மத சார்பின்மை.

மாட்டுக் கறி திருடிய முஸ்லிம் ஒருவன் இறந்து போனால் அவன் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்; பல லட்சம் மதிப்புள்ள வீடு; குடும்பத்தினருக்கு அரசு வேலை – இது மத சார்பின்மை;
ஆனால், பசு வதையை தடுக்கச் சென்ற ஒரு இந்து கொல்லப் பட்டதற்கு, நீதி கேட்டால் அது மத வெறி.

பெரும்பான்மை மக்களாக வாழும் இந்துக்கள், தாம் தெய்வங்களாக வணங்கும் ராமன் மற்றும் கிருஷ்ணன் பிறந்த நாட்களுக்கு அரசு விடுமுறை கேட்டால், அது மத வெறி; ஆனால், வந்தேறி மதங்களைத் தோற்றுவித்த முஹம்மது மற்றும் யேசுவின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிப்பது மத சார்பின்மை.

இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி பிடித்தவர். ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் மத சார்பற்ற மனிதர்!

1000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய மதம் உயர்வானது;
ஆனால், அதற்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு மேலான கலாச்சாரம் கேவலமானது.

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி;
ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மத சார்பின்மை.

காளை மாடு அடக்குதல் விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன; ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.

ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி ‘வந்தே மாதரம்’ சொன்னால், அவன் மத வெறியன்;
ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.

மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.

மத உணர்வுகளை புண் படுத்துகிறோம் என்று தெரிந்தும் பலமுறை ‘கலை’ என்ற பெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி; ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.

விழிப்புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களைத் தாய் மதத்துக்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி;ஆனால், 100 கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று ‘ஒவேசி’ பேசினால், அது மத சார்பின்மை.

கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் அது பார்பனீயம்; ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அது தொழுகை.

குதிரையின் காலை வெட்டினால் அது மதவெறி;
ஆனால், கொத்தாக பலரை கொன்றால் அது மத சார்பின்மை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்தியில், 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் நுழைந்த பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால், அது இந்துக்களின் மத வெறி; ஆனால், அந்த இஸ்லாம் தோன்றிய நாடுகளில், மற்ற மதங்களுக்கு (நாத்திகம் உள்பட) 100% தடை போடுவது ‘அமைதி மார்க்கத்தின்’ அன்பு வழி.

பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப்படுவதை எதிர்த்துப் போராடினால் அது மத வெறி; ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மத சார்பின்மை!

எங்கோ ஒரு இந்து கோவிலில் பெண்கள் நுழைய தடை இருந்தால், அது இந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல்; நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் ‘நவ துவாரங்களை’ மூடிக் கொண்டிருப்பது மத சார்பின்மை.

வருஷத்துக்கு ஒரு முறை தீபாவளி சமயம் பட்டாசு வெடிப்பதும், விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் எடுப்பதும் சமூகத்துக்குகு எதிரானது; ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கிலும், கொடூரமாகக் கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.

அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன்; ஆனால், நாட்டை சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்!

எனக்கு ஏற்பட்டுள்ள மேற்கண்ட 30 சந்தேகங்களுக்கும், விடை கூறி தெளிய வைக்கிறீர்களா, தமிழ் தேசியம் பேசி வாக்குப் பொறுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe