நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவிக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?!

Published:

lalithambal
lalithambal

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்! 

கேள்வி: ராஜராஜேஸ்வரியாக  தரிசனம் அளிக்கும் லலிதாதேவிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? ப்ரீதியான புஷ்பங்கள் எவை? 

பதில்: ராஜராஜேஸ்வரி சம்பூர்ணமான அம்பிகை ஆதலால் அனைத்துவித சாத்வீகமான நைவேத்தியங்களும் உகந்தவையே. 
‘சர்வோதன ப்ரீத சித்தா’ – ‘அனைத்துவித உணவையும்  விரும்பி ஏற்பவள்’ என்கிறோம்.

பூஜைக்குப் பயன்படுத்துபவற்றைக் கொண்டு, பரம்பரையாக செய்யக் கூடியவற்றை செய்யலாம். 

ராஜராஜேஸ்வரி சம்பூரணமாக ஸஹஸ்ரார கமலத்தில் பிரகாசிக்கும் லலிதா திரிபுரசுந்தரி ஆதலால் பலவித நைவேத்தியங்களை செய்து நிவேதிக்க வேண்டும். ஒவ்வொரு நைவேத்தியமும் தாதுபுஷ்டியை  அளிக்கிறது. முக்கியமாக பூரணத்தோடு கூடிய சுழியன் என்ற இனிப்பு பதார்த்தத்தை இன்று நைவேத்தியம் செய்வது சிறப்பு.

அதேபோல் அனைத்துவித மலர்களும் இந்த பருவ காலத்தில்  பூக்கும் அனைத்துவித புஷ்பங்களும், சுகந்தமான இலைகளும் அம்பிகைக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img