என்ன செய்யலாம் இன்னிக்கு? இது செய்யுங்க‌.. பின்னல் சமோசா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
pinnal saamosa - 2026

பின்னல் சமோசா
தேவையான பொருட்கள்
மைதா – கால் கிலோ
எண்ணெய். – அரை லிட்டர்
உருளைக்கிழங்கு. – கால் கிலோ
பச்சைபட்டாணி – 100 கிராம்
காரட் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய். – 3
காரப்பொடி. – அரைத் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – கால் கட்டு
தக்காளி. – ஒன்று

செய்முறை
மைதா மாவில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

உருளைக்கிழங்கு, காரட், பச்சைபட்டாணி ஆகியவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கால் தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.

மைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீளவாக்கில் வைத்து இரண்டு ஒரங்களையும் கத்தியால் கீறி விடவும்.

கீறிய ஒவ்வொரு சிறுத் துண்டாக எடுத்து பூரணத்தின் மேல் ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு நன்றாக அழுத்தி விடவும்.

பின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான பின்னல் சமோசா தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.