நறுக்நறுக்கென்று நொறுக்கு தீனி! லக்க லக்கா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
chival - 2026

லக்க லக்கா
தேவையான பொருட்கள்
மைதா – 250 கிராம்
கடலை மாவு – 125 கிராம்
தனியா தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
ஓமம் – 1/2 ஸ்பூன்
பேக்கிங் பௌடர் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு அதில் 2 ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, ஓமம், பேக்கிங் பௌடர் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்திக் கல்லில் வைத்து வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொண்டு வட்டமாக தேய்த்த சப்பாத்தி மாவின் நடுவில் வைத்து,

மாவை நன்றாக மூடி மறுபடியும் வட்டமாக தேய்க்கவும். பிறகு அதை ஒரு கத்தியினால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.