35 கிலோமீட்டர் பின்னோக்கி ஓடிய ரயில்! பதறிய பயணிகள்! வீடியோ!

இந்தியா சற்றுமுன்
train 3 - 2026

தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால், பிரேக் போட முயன்று கட்டுப்பாட்டை இழந்த ரயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளாததால் பயணிகள் உயிர் தப்பினர்.

உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரெயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளாததால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர்.

தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் பிரேக் போட்ட ரயில் ஓட்டுனர், ஒரு மாடு மீது மோதிவிட்டதாகவும் அதனால் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.