குட்டீஸ் ஆவலோடு உண்ண ஓட்ஸ் அவல் பணியாரம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
ots paniyaram
ots paniyaram

ஓட்ஸ் அவல் பணியாரம்

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ், அவல், கோதுமை மாவு – தலா ஒரு சிறிய கிண்ணம்,
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கேழ்வரகு மாவு – ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்),
கடுகு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், நெய் – தலா 50 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸ், அவல் இரண்டையும் ஒன்றாக முப்பது நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகுத்தூளை சேர்த்து வதக்கி, கலவையை மாவுடன் சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயுடன் நெய்யைக் கலந்து கொள்ளவும். பணியாரக்கல்லின் குழிகளில் எண்ணெய் – நெய் கலவையைத் தடவி மாவை விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு புதினாச் சட்னி, தேங்காய்ச் சட்னி சிறந்த காம்பினேஷன். தேங்காய்ப்பால் தொட்டும் சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.