ஆரோக்கிய சமையல்: கோதுமை ரவை புலாவ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
wheat pulav
wheat pulav

கோதுமை ரவை புலாவ்

தேவையான பொருட்கள்:
பெரிய கோதுமை ரவை – 200 கிராம், குடமிளகாய் – ஒன்று,
பீன்ஸ் – 10,
பச்சை மிளகாய் – ஒன்று,
பச்சைப் பட்டாணி – 100 கிராம்,
பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று
புதினா – ஒரு கைப்பிடி அளவு,
வறுத்த முந்திரிப்பருப்பு – 10 எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பொரித்த பனீர் துண்டுகள் – 10,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கோதுமை ரவையை ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். கேரட், குடமிளகாய், வெங்காயம், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கவும். உருளைக்கிழங்கின் தோலைச் சீவவும். பின்னர் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி எல்லாக் காய்களையும், பச்சைப் பட்டாணியும் சேர்க்கவும்.

பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். காய் கலவை நன்கு வதங்கியதும் புதினாவையும் போட்டு வதக்கி இறக்கவும்.

அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கோதுமை சாதத்தைப் போடவும். இதனுடன் வதக்கிய காய் கலவை, வறுத்த முந்திரி, பொரித்த பனீர் சேர்த்து நன்கு கலக்கவும். வெங்காயத் தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் பிஸ்தா, பாதாம், உலர்திராட்சையும் சேர்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.