ஆல் டைப் மெயின் டிஷ்க்கும் செம சைட் டிஷ்! மீல்மேக்கர் ப்ரை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்

 

Mealmaker Fry
Mealmaker Fry

மில்மேக்கர் ஃப்ரை

தேவையான பொருட்கள்

100 கி. மீல் மேக்கர்
2 பெரிய வெங்காயம்
1 தக்காளி
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/4 ஸ்பூன். கடுகு, சீரகம்
11/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2 ஸ்பூன். சீரகத்தூள்
1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு

செய்முறை
முதலில் மீல்மேக்கரை நன்றாக கழுவி கொதிக்கும் தண்ணீரில் வேக வைத்து பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி எடுக்கவும்.

தக்காளி சிறிது வதங்கியதும் மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம்மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து மசாலா ஒன்றோடு ஒன்று கலந்து வரவேண்டும். பின்னர் வேகவைத்த மீல் மேக்கரை இதில் சேர்த்து பிரட்டி எடுத்தால் காரசாரமான மீல் மேக்கர் ஃப்ரை ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.