Onion Peanut Spice - 2026

வெங்காயத்தாள் வேர்கடலை மசாலா
தேவையான பொருட்கள்

ஒரு கப்வெங்காயத்தாள்
அரை கப்வேர்கடலை
10சின்ன வெங்காயம்
2பச்சைமிளகாய்
3 டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
சிறிதளவுமஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
எண்ணெய்

செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்துக் கொள்ளவும். பின்பு மஞ்சள் தூள் சாம்பார் பொடி உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தாள் வேக தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். வேர்க்கடலையை பொடித்து வைத்துக் கொள்ளவும். பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும் (வெங்காயத்தாள் வேகவைக்க ஊற்றிய தண்ணீர் சிறிது சுண்டாமல் இருக்க வேண்டும்) வெங்காயத்தாள் வேர்கடலை மசாலா ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending