mixed millet dhosai
mixed millet dhosai

மிக்ஸ்டு மில்லெட் தோசை

தேவையான பொருட்கள்:
சாமை, வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சோளம் – தலா 50 கிராம்,
உளுந்து – 75 கிராம்,
வெந்தயம் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சிறுதானியங்கள் அனைத்தையும் உளுந்து, வெந்தயத்துடன் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களைந்துகொள்ளவும். இதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். மாவில் உப்பு போட்டுக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் மாவின் மேலே இட்லி மிளகாய்ப்பொடி தூவியும் தோசை வார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending