
திருப்புகழ்க் கதைகள் 152 – முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
அவனிதனிலே பிறந்து – பழநி
மூலாகமங்களும், உபாகமங்களும்
3. நாராயணகண்ட சிவாசாரியார்
ம்ருகேந்த்ராகமத்தின் நாற்பாதங்களுக்கும் விரிவானதொரு வியாக்கியானத்தை எழுதி அவ்வாகமத்தின் சிறப்புக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர் நாராயணகண்டர்.
4. போஜதேவர்
தத்வப்ரகாசம் என்னும் 72 சுலோகங்கள் கொண்ட இந்நூலின் வாயிலாகச் சைவஸித்தாந்தத்தின் 36 தத்துவங்களைப் பற்றிய மிக மிக முக்கியமான கருத்துக்களை எல்லோரும் எளிதில் அறியும் வண்ணம் தொகுத்திருக்கிறார். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான போஜதேவர் அக்காலத்திலேயே ஆகமங்களில் பரந்து கிடக்கும் இஞ்ஞானபாதக் கருத்துக்களைத் தொகுத்து சைவசித்தாந்தத்தின் தத்துவக்கொள்கைகளுக்கு வரையறை செய்திருப்பது வியந்து போற்றத்தக்கது. ஏனெனில், மற்றைய தர்சனங்களான வேதாந்தம், மீமாம்ஸா, நியாயம், வைசேஷிகம், பௌத்தம் ஆகியவற்றிற்கு இணையாகச் சைவஸித்தாந்தத்தையும் நன்கு வளர்ந்த ஒரு தர்சனமாக ஆக்கிய பெருமை ஸத்யோஜ்யோதிக்குப் பின்னர் போஜதேவரையே சாரும். பாஞ்சராத்ராகமங்களின் அடிப்படையில் இந்த அளவுக்கு விரிந்து வளர்ந்த வைணவதர்சன நூல்கள் ஏதும் இருந்ததாகவோ ,நமக்குத் தெரியவில்லை; அல்லது இருந்தும் நமக்கு ஏதும் கிடைக்கவில்லை. இராமானுஜர் போன்றோர் வளர்த்தது உபநிஷத்துக்களின் அடிப்படையில் எழுந்த வைணவம். அதில் ஆகமங்களின் பங்கு மிகக் குறைவு.
5. அகோரசிவாசாரியார்
சைவசாத்திர வளர்ச்சிக்கும், ஸத்யோஜ்யோதி போன்ற ஆசாரியர்களின் நூல்களில் ஆழ்ந்த கருத்துக்களை நன்கு அறிநுகொள்வதற்கும் அகோரசிவாசாரியாரின் உரைகள் மிக இன்றியமையாதன. அவரை டீகாசாரியார் என்று பெருமைபடக் கூறலாம். அவருடைய உரைகள் இல்லாவிடின் ஸத்யோஜ்யோதியின் நூல்களையோ இராமகண்டருடைய நூல்களையோ எளிதில் பொருள் கொள்ள இயலாது.
ம்ருகேந்த்ர-ஆகம-ஞானபாதத்திற்கு நாராயணக்கண்டர் இயற்றிய வ்ருத்தி என்னும் வியாக்கியான தீபிகா என்றழைக்கப்படும் விரிவானதொரு உரையின் மூலம் சைவசித்தாந்த வியாக்கியானத் தொண்டை அகோரசிவாசாரியார் தொடங்கியிருக்கிறாரெனத் தெரிகிறது. சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளான ஸத்காரியவாதம் முதலியவற்றிற்கு வித்திட்ட பூமியாகத் திகழ்கிறது இவருடைய உரை. இவரது உரை மற்ற உரைகளைக் காட்டிலும் விரிவானது; பல கொள்கைகளை ஆழ்ந்து ஆராய்ந்து புறச்சமயக்கொள்கைகளை வாதிட்டு வென்று சைவசித்தாந்தத்தைத் திறம்பட நிறுவுவது. போஜதேவரின் தத்வப்ரகாசத்திற்கு இவரியற்றிய உரை சற்றுச் சுருக்கமானது; அந்நூலுக்கு அத்வைதமதத்திற்கு இணங்க இயற்றப்பட்ட வேறு ஒரு உரையை மறுத்து த்வைதக் கொள்கையே சைவசித்தாந்தத்தின் அசைக்கமுடியாத அடிப்படை என நிறுவுவதற்காகவே தாம் இவ்வுரையை வரைவதாகத் தொடக்கத்தில் கூறுகிறார் அகோரசிவாசாரியார்.
அடுத்து, ஸத்யோஜ்யோதியின் தத்வஸங்க்ரஹத்திற்கு மிக விளக்கமான உரையை இவர் இயற்றியுள்ளார்; ஏற்கெனவே இராமகண்டர் சரந்நிசா என்னும் உரையை வரைந்துள்ளதாகவும், தாம் சுருக்கமாக உரையியற்றுவதாகவும் கூறுகின்றார். ஆனால் இராமகண்டரின் உரை தற்சமயம் நமக்குக் கிடைக்கவில்லை. அவ்வாறே, தத்வத்ரயநிர்ணயம், போககாரிகை ஆகியவற்றிற்கும், ஸ்ரீகண்டரின் இரத்னத்ரயத்திற்கும் அகோரசிவாசாரியார் உரை வகுத்துள்ளார். இவ்வுரைகள் அனைத்தும் ஞானபாதச்செய்திகளை பிக விரித்துரைப்பன; கிரியாபாதத்திற்கு க்ரியாக்ரமத்யோதிகா என்னும் மிக விரிவான பத்ததி நூலை அகோரசிவாசாரியார் இயற்றிச் சைவசித்தாந்தத்தின் புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்துள்ளார். தீ¨க்ஷ பெற்ற சைவ ஆசாரியர் செய்யவேண்டிய நித்தியம் நைமித்திகம், காம்யம் என மூன்று பெரும் பிரிவைக்கொண்ட சைவசித்தாந்தக் கிரியைகளில் சௌசம் முதல் சிவபூஜை, போஜனம் ஈறான நித்திய கருமங்களையும், சிவதீக்ஷை, சைவசிராத்தம், அந்த்யேஷ்டி ஈறான நைமித்திகக் கிரியைகளையும் செவ்வனே விளக்குவது இந்த பத்ததி நூல். ஒவ்வொரு கிரியையும் மிக நுணுக்கமாகவும், ஐயம் திரிபறவும் விளக்கி கூறுவது இப்பத்ததி நூல். தமிழ்நாட்டில் தற்காலத்தில் இது மிகவும் பிரசித்திபெற்று அனைத்துச் சைவ ஆசாரியர்களாலும் போற்றிக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
சைவமடங்கள்
மிகப் பழம்காலந்தொட்டே சைவ ஆசாரியர்கள் தாங்கள் தவம் இயற்றுவதற்காகக் விந்திய மலையின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தபோவனங்களை நிர்மாணித்து அங்குக் கடுமையான தவம் இயற்றிவந்துள்ளனரென்று ஆறாம், ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலிருந்து நாம் அறிகிறோம். பல அரசவமிசங்கள் அவ்வாசாரியர்களுக்கு சீடராகி அவர்களை நன்கு ஆதரித்துவந்துள்ளனர். அவற்றுள் ஆமர்தகம் என்பது மிகவும் பழமையானதும் எல்லாவற்றுள்ளும் தலைசிறந்து விளங்கியதுமான ஒரு சைவமடம்; அதன் ஆசாரிய பரம்பரை ஆமர்தகசந்தானம் என்று வழங்கப்பட்டது. அதுவே பல கிளைகளாகப் பிரிந்து மற்ற தேசங்களில் பரவி சைவசித்தாந்த்ததை நன்கு வளர்த்துவந்துள்ளது. கோளகி, புஷ்பகிரி, ரணபத்ரம் என்னும் சந்தானங்கள் அதிலிருந்து தோன்றி கூர்ஜரம் (குஜராத்), ஆந்திரம், பின்னர் தமிழகம் ஆகிய பிரதேசங்களில் பரவி, மன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு மக்களிடையே சைவ ஆகமக் கொள்கைகளையும், சிவபக்தியையும் பரப்பி வந்துள்ளதற்கு மிக விரிவானதும் தெளிவானதுமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
அரசவம்சங்களான சாளுக்கியர்கள், கலசூரிகள், காகதீயர்கள், கொங்கணத்தில் ரட்டர்கள், தமிழகத்தில் சோழர்கள் சைவ ஆசாரியர்களுக்குத் தத்தம் தேசங்களில் மடங்களை அமைத்துத் தாங்களும் தீக்ஷை பெற்றுச் சைவத்தை அனுஷ்டித்தும் மக்களிடையே பரப்பியும் வந்த செய்திகளை மிக விரிவாக அக்கல்வெட்டுகள் நமக்குக் கூறுகின்றன. அக்கல்வெட்டுகளில் அவ்வம்மடத்து ஆசாரியர் பரம்பரை, அவர்களுடைய சீடர்கள் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் முதலியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன.