
-அ. அஷ்வத்தாமன்
பண்டிட்ஜி! ஒருங்கிணைந்த மனிதத்துவம் (Integral humanism) என்கிற பாஜகவின் சித்தாந்தத்தை வடிவமைத்துக்கொடுத்த முன்னோடி!
கம்முனீசம், சோசியலிசம், முதலாளித்துவம் என மேற்குலக சித்தாந்தங்களை மிரள செய்தவர் !
மகாத்மா காந்தியின் ஆசையான ‘காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும்’ என்பதை தீவிரமாக முன்னெடுத்தவர் இவரே. ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்ற அறைகூவலை விடுத்தவர். இவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் என்றோ அழிந்திருக்கும்.
இன்றைக்கு மிக வெற்றிகரமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ திற்கு முன்னோடி இவர்.
அன்றைய நேரு போன்ற தலைவர்கள், மேற்குலக சித்தாத்தங்களை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தபோது “இந்திய சித்தாந்தத்தை” பேசி உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
மோடிஜி இன்றைக்கு முன்னெடுக்கின்ற “ஆத்ம நிர்பர் பாரத்” (சுயசார்பு பாரதம்) போன்ற திட்டங்களுக்கு சித்தாந்த முன்னோடி இவர்தான். 2014ஆம் ஆண்டு முதன்முதலில் மோடிஜி எம்பியாக பதவியேற்றுக் கொண்ட போது பண்டிட்ஜி பெயரைத்தான் நினைவு கூறினார்.
இந்தியர்களை வெறும் வாடிக்கையாளர்களாகவே வைத்திருக்க நினைக்கும் கார்பரேட் மாபியாவிற்கும் அதற்கு துணைபுரியும் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், சிம்ம சொப்பனமாக இருந்த இவர், மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
உத்திர பிரதேசம் முகல்சாராய் ரயில் நிலையத்தில் பிரேதமாக கிடந்தார் அந்த மாபெரும் தலைவன் !
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த படுகொலையை வரும் பெட்டி திருடர்கள் நடத்திய கொலை என்று இந்த வழக்கை முடித்துவிட்டார் !
தீவிரமாக நடந்த எதிர்ப்புகள் காரணமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. நேர்மையான சிபிஐ அதிகாரியான ஜான் லோபோ விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் இந்த விசாரணையை துரிதப்படுத்தி நிலையில் அவர் திடீரென்று திரும்பப்பெற பெற்றார்.
பிறகு விசாரணை அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பிய படியே நடந்து கொலைக்கு காரணம் திருடர்கள் தான் என்று குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்ற அறிக்கையை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், “இந்த வழக்கில் உண்மையை சிபிஐ கண்டு பிடிக்கவே இல்லை , உண்மையான கொலைக்கான மறைக்கப்பட்ட காரணம் இதுவரை வெளிவரவில்லை” என்று கூறியது”.
அதன்பிறகு எழுபது எம்பிகள் பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பிய பிறகு இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் சந்திரசூட் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை கமிஷன், தனது அறிக்கையில் பண்டிட்ஜியினுடைய கொலைக்குப் பின்னால் பல மர்மமான விஷயங்கள் இருக்கிறது. இது கிரைம் நாவல்கள், ஜேம்ஸ்பாண்ட் கதைகளைக் காட்டிலும் பல மர்மங்களை கொண்டதாக இருக்கிறது என்று கூறியது.
இதுவரை பண்டிட்ஜி யின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளையும், அதை செய்ய சொன்ன கொடுங் குற்றவாளிகளையும் கண்டு பிடிக்கவே இல்லை!
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி , முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஜி இவர்களது கொலைகளை போன்று இதுவும் கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்குகளாகவே இருக்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் வெளிப்படையாக உறுதியாக தெரிகிறது. இந்த மூன்று ஆளுமைகளையும் கொலை செய்தது ஒரே கும்பல் தான் !
இவர்கள் வாழ்ந்திருந்தால் யாருக்கு தொந்தரவாக இருந்திருக்கும் என்பதை வரலாற்றை புரிதலுடன் உற்றுநோக்கினால் புரியும்.
அடிக்கடி சொல்வதை போல இங்கு இருக்கிற மற்ற அரசியல் கட்சிகளைப் போல தொண்டர்களை பலி வாங்கி சொகுசு கார் நகர தலைவர்களைக் கொண்ட இயக்கம் இல்லை பாரதிய ஜனதா கட்சி தலைவர்களையே பறிகொடுத்த தியாக இயக்கம் !
அதனால்தான் இன்றைக்கு உலகின் மிகப் பெரிய கட்சியாக, ஈடில்லா ஈடுபாடு கொண்ட தொண்டர்களைக் கொண்ட கட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று பண்டிட் ஜி யினுடைய பிறந்த நாள் ! நினைவைப்போற்றி வணங்குவோம்! வந்தே மாதரம் !-