மூன்றே நிமிடத்தில் தயார்.. மூங்தால் சீரா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
munkdhall seera
munkdhall seera

மூங்தால் சீரா

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
நெய் – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
முந்திரி – தேவையான அளவு.

செய்முறை:
முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அரைத்த பருப்பை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூட்டை போல கட்டி அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துவிடவும்.

அடிக்கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, அரைத்த பருப்பு விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து, சுருளக் கிளறி இறக்கி, வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.