
மெக்சிகன் ரைஸ்
தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப்,
நறுக்கிய கேரட், பீன்ஸ், குடமிளகாய் கலவை – ஒரு கப்,
ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (வேகவைத்தது) – ஒரு கைப்பிடியளவு,
பூண்டுப் பல் – 6,
காய்ந்த மிளகாய் – 5, .
வெங்காயம், தக்காளி – தலா 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பூண்டுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, வேகவைத்த கார்ன், காய்கறி துண்டுகள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிட்டு, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: ஸ்வீட் கார்னுக்கு பதிலாக ராஜ்மா பயன்படுத்தலாம்.