சீராளம்
தேவையானவை:
பச்சைப்பயறு – ஒரு கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 8,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
தேங்காய் துருவல் – ஒரு கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 8 (பொடியாக நறுக்கவும்),
பூண்டு – 8 பல் (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து… உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். மாவை இட்லித் தட்டில் வேக வைத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து… வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, கிண்ணங்களில் வைத்துப் பரிமாறவும்.