கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ்
தேவையானவை:
நறுக்கிய புடலங்காய், பூசணித் துண்டுகள், முள்ளங்கி துண்டுகள் – தலா அரை கப், மாங்காய் துண்டுகள், நறுக்கிய கேரட் – தலா கால் கப்,
தக்காளி – 2 (நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.
தாளிக்க:
சீரகம், நசுக்கிய பூண்டு, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து… தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். புடலங்காய், பூசணிக்காய், மாங்காய், முள்ளங்கி, கேரட் துண்டுகளை சேர்த்து… உப்பு, மஞ்சள்தூள் போட்டு, நீர் தெளித்து நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும்.