லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கீரை பிரியாணி!

keerai piriyani
keerai piriyani

கீரை பிரியாணி
அரைக்கீரை / சிறு கீரை – ஒரு கட்டு
பாசுமதி அரிசி – ஒன்றரை கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – ஒன்று
இஞ்சி, பூண்டு
சாம்பார் தூள் – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்
தக்காளி – ஒன்று
புளி – 2 கொட்டை அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா
உப்பு
தாளிக்க:
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய், மராத்தி மொக்கு

செய்முறை

அரிசியைக் களைந்து ஊற வைக்கவும். மிக்ஸியில் வெங்காயத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும். (நைசாக அரைக்க வேண்டாம்).

கீரையை இளம் தண்டுடன் சுத்தம் செய்து, உப்பு மற்றும் புளி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக வைத்து ஆறவிடவும். (முக்கால் பதம் வெந்தால் போதுமானது). கீரை ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

கொண்டைக்கடலையை ஊற வைத்து, பிறகு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மராத்தி மொக்கு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை விழுதைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

கீரை வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கொண்டைக்கடலையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாக கொதி வந்ததும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்துச் சேர்க்கவும். மீண்டும் கொதிக்கத் துவங்கியதும் கொத்தமல்லித் தழை மற்றும் புதினா தூவி, குக்கரை மூடி 10 – 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.

சுவையான கீரை பிரியாணி தயார். ரைத்தாவுடன் பரிமாறவும்.

வெங்காயம், தக்காளியை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. கீரையை அரைக்க அதன் மீது தெளித்த தண்ணீரே போதுமானது. சாம்பார் தூள் இல்லாதவர்கள் அரை தேக்கரண்டி மிளகாய் தூளும், அரை தேக்கரண்டி தனியா தூளும் பயன்படுத்தலாம்.

காரம் குறைவாகவே இருக்கும். விரும்பினால் ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் சேர்க்கலாம். கீரை சாப்பிட அடம் பிடிக்கும் பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

கொண்டைக்கடலைக்கு பதிலாக வேக வைத்த பச்சை வேர்க்கடலை அல்லது பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றையும் சேர்க்கலாம். இவை எதுவும் சேர்க்காமல் வெறும் கீரையை மட்டுமே சேர்த்து இந்த பிரியாணியைச் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories