
மாங்காயின் மகத்துவம்
மாங்காய் சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். வயிற்றுப் பூச்சிகள் போகும். தாது பலவீனமாக உள்ளவர்களுக்கு சக்தியைக் கொடுக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
சாமந்திப் பூ மகத்துவம்
சாமந்திப் பூவை தினமும் தலையில் குடி வந்தால் கூந்தலில் பேன் வராது. தலைமுடி உதிராது. இதனை செவ்வந்திப் பூ என்றும் சொல்வதுண்டு.
ரோஜா குல்கந்து
மலச்சிக்கல், மூலச்சூடு, சீதபேதி, இரத்த பேதி போன்றவைகளுக்கு ரோஜா மொக்கு கை கண்ட மருந்தாகும். உடலின் உள் உறுப்புகளின் மேன்மைக்கு ரோஜா குல்கந்து மிகவும் சிறந்தது.
நெல்லிக்காய் மகத்துவம்
உடலணுக்களை பாதுகாப்பதில் நெல்லிக்காய் முதலிடம் வகிக்கிறது. நாள்தோறும் ஒரு நெல்லிக்காயேனும் சாப்பிட்டு வரவேண்டும். அல்லது நெல்லிக்காயை காய வைத்து கொட்டை இடித்துத் தூளாக்கி தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வர என்றும் இளமை யோடு இருக்கலாம்.
வெள்ளை தாமரைப்பூ மகத்துவம்
வெள்ளை தாமரை மலரின் இதழ்களைப் பிய்த்து எடுத்து கஷாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலமடையும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
வெங்காய மகத்துவம்
காச நோய் உள்ளவர்கள் வெங்காயத்தை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர ஆரம்ப காச நோய் குணமாகும். 229. எலுமிச்சம் பழ மருத்துவம்
இதிலுள்ள சிட்ரிக் அமிலம் குளுமை தரும். எலுமிச்சம் பழரசத்தை பருகினால் சுர வேகத்தில் ஏற்படும் தாகமும் குறையும். உடல் வெப்பமும் குறையும். கோபத்தால் ஏற்படும் படபடப்பு அடங்கும். சுவாசக் குழாய், குடல் மற்றும் உடலின் வேறு பகுதிகளிலிருந்து இரத்தம் வெளிப்படும்போது எலுமிச்சம் பழச்சாறு அருந்த சரீரத்தை குளுமைப்படுத்தி இரத்தத்தை நிறுத்துகிறது.
எலுமிச்சம் பழ ரசத்துடன் வெங்காய சாறு கலந்து கொடுத்தால் வாந்தி பேதி (காலரா) நின்று விடும்.
வெற்றிலை மகத்துவம்
ஆறு வெற்றிலையும் அதற்குரிய சுண்ணாம்பையும் ஒருவர் உட் கொண்டால் அதில் பத்து அவுன்ஸ் பாலில் உள்ள சுண்ணாம்புச் சத்து இருப்பதாக கண்டறிந்துள்ளனர் வெற்றிலைச் சாற்றில் கிருமிகள் அழிந்து போகும். வெற்றிலை பாக்குடன் புகையிலையைச் சேர்த்தால் சுண்ணாம்புச் சத்தை அழித்து விடும்.