பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள மூத்த பொறியாளர், இணை மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Engineer, Deputy Manager, Accounts Officer மற்றும் Deputy Engineer
வயது வரம்பு :
Senior Engineer – 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Deputy Manager – 36 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Accounts Officer மற்றும் Deputy Engineer – 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Senior Engineer – Aerospace, Aeronautical Engineering, E&C, Computer Sc Eng, Mechanical, Mechtronics பாடங்களில் பிஇ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Deputy Manager – Aerospace, Aeronautical Engineering, E&C பாடங்களில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accounts Officer – CA அல்லது ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Deputy Engineer – Electronics, Electronics மற்றும் Communication, Telecommunication, Electrical மற்றும் Electronics பாடங்களில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.1,80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Senior Engineer மற்றும் Deputy Manager
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Accounts Officer மற்றும் Deputy Engineer
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Senior Engineer
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bel-india.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 07.12.2021 மற்றும் 08.12.2021 வரையில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
Senior Engineer, Deputy Manager – ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
Accounts Officer மற்றும் Deputy Engineer பணிகளுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.