லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஆனியன் ரைஸ்!

Published:

Onion Rice - 2026

ஆனியன் ரைஸ்
தேவையான பொருட்கள்
சின்னவெங்காயம் – கால் கிலோ
சாதம் – ஒரு கப்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – முழுதாக ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தாளிக்க

செய்முறை
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

கடாய் சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைபருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பெருங்காயத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பொடியாய் நறுக்கிய இஞ்சி, பாதியாய் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். சுருண்டதும் சாதம் கொட்டி கிளறவும். 2 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

டொமேட்டோ சாஸ், சிப்ஸ், கிரேவி வகைகள் உடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Related articles

Recent articles

spot_img