அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பேதி, மஞ்சள் காமாலை, உதிரப்போக்கு, வாய்ப்புண், பல்வலி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

பேதி நிற்க…

எலுமிச்சம் பழத்தில் பாதியளவு சப்பித் தின்றாலும் சரி அல்லது சாறு பிழிந்து குடித்தாலும் பேதி நிற்கும். புளித்த மோர் ஆழாக்கு அளவு இரண்டு முறை குடித்தாலும் பேதி நிற்கும்.

மஞ்சள் காமாலைக்கு…

கடுகு ரோகிணி என்ற மருந்தை வாங்கி வந்து பட்டுப்போல் தூள் செய்து ஒரு சீசாவில் எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை சுண் டைக்காயளவு எடுத்து வெல்லத்தில் கலந்து ஏழு நாள்கள் தொடர்ந்து சாப்பிட மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாக மென்று தின்றாலும் அல்லது இலையை சாறு பிழிந்து ஓர் அவுன்ஸ் குடித்து வந்தாலும் மஞ்சள் காமாலை குணமாகும்.

கொழுந்து துத்தி இவையை அரைத்து நெவ்விக்காயளவு ஒரு நாளைக்கு இரண்டு வேளை ஒரு வாரம் சாப்பிட குணம் தெரியும்.

உதிரப் போக்கு – பெரும்பாடு சரியாக…

பழுக்காத முற்றிய மாங்காயின் மேல் தோலை நெய்யில் வதக்கி சர்க்கரை சேர்த்து இரண்டு தோலா வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர உதிரப் பெருக்கு நோய் குணமாகும்.

நல்ல புளியங்கொட்டையாக தேர்ந்தெடுத்து மேல் தோலை நீக்கி பருப்பை மட்டும் இடித்து தூள் செய்து சீசாவில் வைத்துக் கொண்டு அதிகாலையில் ஒரு ஸ்பூன் தூளை ஓர் ஆழாக்கு பசுவின் மோரில் கலந்து சாப்பிட்டு வர பெரும்பாடு சரியாகும்.

வாய்ப்புண்ணுக்கு…

அகத்திக்கீரையை சிறிது வெங்காயம் போட்டு அவித்து அதன் சாற்றைக் குடிக்க வேண்டும். கீரையை தேங்காய் போட்டு பொரியல் செய்து சாப்பிட இரண்டு மூன்று நாள்களில் நல்ல குணம் தெரியும்

மணத்தக்காளியை பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிடுவதால் பலன் தரும்.
வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிடுவதும் குணம் தரும்.

பல் வலி சரியாக…

மிளகையும், சர்க்கரையையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்தால் வலி குணமாகும்.

கிராம்பை நசுக்கி வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தினாலும் பல்வலி குணமாகும்.

விளாம்பழம் பல் ஈறு சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.

அத்தி இலை அல்லது அதன் வேரைக் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தாலும் பல் வலி நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.