நீரிழிவு நோயா?
நாள்தோறும் பாகற்காய் சூப் வைத்து சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.
தினமும் நெல்லிக்காய் சாறு சாப்பிட இன்சுலின் ஊசி போட வேண்டிய அவசியமின்றி நீரிழிவு நோய் குணமாகும்.
இஞ்சியை இடித்து சாறு பிழிந்து பனைவெல்லம் சேர்த்து ஓர் அவுன்ஸ்
வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் நிரந்தரமாக நீங்கும்.
தலைவலிக்கு…
சிறிது நவச்சாரத்தை தண்ணீரில் இறுகக் கரைத்து தலை உச்சியிலும் நெஞ்சிலும் கை விரல்களின் நுனியிலும் தடவ தலைவலி குணமாகும்.
சூதக வலிக்கு…
கரிய போளம், பெருங்காயம் இரண்டும் பாக்களவு எடுத்து தேன் விட்டு மைய அரைத்து 24 சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க சூதக வலி குணமாகும்.
உஷ்ணம் காரணமாக ஏற்படும் வலிக்கு…
உஷ்ணம் காரணமாக சிலருக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுவதுண்டு. உள்ளங்கையில் சிறிது விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு அடிவயிற்றில் தேய்க்கலாம். தொப்புள் பகுதியில் விளக் கெண்ணெய் தடவி தேய்த்து விடலாம். ஒரு முறை மலம் கழித்தால் வலி நிற்கும்.
ஈரல் குலை வலிக்கு…
பசுவெண்ணெய், ஈர வெங்காயம், பனை வெல்லம் சம எடை கூட்டி அரைத்து உண்ண ஈரல் குலை வலி நீங்கும்.