லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புடலைங்காய் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்

புடலங்காய் சாதம்
தேவைப்படும் பொருட்கள்:

புடலங்காய் : ஒரு கப்
கறிவேப்பிலை : ஒரு கொத்து
பெருங்காயம் : சிறிதளவு

தாளிக்க

கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)
நிலக்கடலை- ஒரு மேசைகரண்டி
வரமிளகாய்-2

அரைக்க:
தேங்காய்-கால் மூடி
மிளகு-கால் ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
கொத்தமல்லி- 2 கொத்து
பூண்டு- முழுதாக

செய்முறை:

புடலங்காயை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வேகவிட்டு எடுக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிக்கவும்.
பின் பெருங்காயத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் புடலங்காயை சேர்த்து பாதியாக வேகும் வரை மூடிவைக்கவும்.

பின்னர் அரைத்த விழுது,தக்காளி சேர்த்து நன்கு வேகவிடவும். நன்கு சுருளும் வரை வதக்கவும். பின்னர் சாதத்தை கொட்டி கிளறவும். சுவையான புடலங்காய் சாதம் தயார்!

Leave a Reply