health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: குழந்தைகளுக்கு சளி, கருவுற்ற பெண்களுக்கு, முடி பளபளக்க, வெயில் கொப்புளங்கள், பித்தம் குறைய…!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

குழந்தைக்கு சளியா?

வசம்பை நறுக்கி வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு சங்கு தாய்ப்பாலில் குழைத்து மூன்று வேளை கொடுக்க சளி நீங்கும். காலை, மாலை குழந்தைக்கு ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கொடுத்து வந்தால் சளி பிடிக்காது.

வெயில் கொப்பளமா?

தினமும் குளித்தவுடன் சந்தனம் பூசி வருவது நல்லது. தேங்காய்ப் பாலில் சீரகத்தை சேர்த்தரைத்து கொப்பளங்களின் மேல் தடவி
வரவும். காலையில் தடவி மாலையில் வெந்நீரில் கழுவி வர இரண்டொரு நாளில் நல்ல குணம் தெரியும்.

பித்தம் குறைய..

வேப்பம்பூவை (உலர்த்தி) உப்பு கலந்த மோரில் ஊற வைத்து உலர்த்தி எடுத்து வையுங்கள். இதை நெய்யில் வறுத்து சாதத்தில் கலந்து சாப்பிட பித்தம் குறைவதோடு, பித்தத்தால் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

முடி பளபளக்க…

சிறிதளவு பிராந்தியை தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நல்ல நீரில் ( ஷாம்பு போடாமல்) முடியை அலச முடி லுப்பெறுவதோடு பளபளப்பாகவும் ஆகிறது.

கருவுற்ற பெண்களுக்கு..

மனதை சந்தோஷமாக வைத்து நல்லதையே நினைத்து சத்தான உணவு உண்டு வர ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.