Homeலைஃப் ஸ்டைல்Whatsapp: புதிய அப்டேட்... பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சி!

Whatsapp: புதிய அப்டேட்… பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சி!

whatsapp - Dhinasari Tamil

தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை அள்ளி கொடுத்து வருகிறது.
மொபைல் போன் பயனாளர்கள் மட்டுமல்லாமல் இம்முறை வாட்ஸ் அப் செயலியை கணினியில் பயன்படுத்துவோருக்கும் புதிய விதமான அப்டேட்டை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த அப்டேட் தொடர்பாக வாபீட்டா இன்ஃபோ என்ற தளம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாட்ஸ் அப் செயலியை கணினியில் பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஒரு புதிய வகை அப்டேட் வெளியாக உள்ளது.

அதன்படி இனிமேல் வாட்ஸ் அப் வேப் பயன்படுத்தும் போது இரண்டு நிலை வெரிஃபிகேஷன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த முறையை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை நீங்கள் வாட்ஸ் வெப் பயன்படுத்தும் போது அந்த பாஸ்வேர்டை கொடுத்தால் மட்டுமே கணினியில் வாட்ஸ் அப் வெப்பை பயன்படுத்த முடியும்.

இந்த முறை ஏற்கெனவே வாட்ஸ் அப் மொபைல் செயலியில் உள்ளது. இந்த இரண்டு நிலை வெரிஃபிகேஷன் முறை வாட்ஸ் அப் ஓடிபி முறையில் இருந்து மாறுபட்டது. இதை முதல் முறையாக பயன்படுத்தும் போது முதலில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கு ஏற்ற 6 இலக்க பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.

அந்த பாஸ்வேர்டை ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் முதலில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ரிசேட் செய்யும் லிங்க் வரும். இதன்மூலம் உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை யாரும் எளிதாக கணினியில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் இது வாட்ஸ் வேப்பிற்கு கூடுதல் பாதுகாப்பை தரும் வகையில் அமைந்திருக்கும்.

wtsup update - Dhinasari Tamil

இந்த புதிய அப்டேட் கூடிய விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள வாட்ஸ் அப் சேட்களை ஐஓஎஸ் போன்களுக்கு பதிவிறக்கம் செய்யும் வகையிலும் ஒரு புதிய அப்டேட் வெளியிட வாட்ஸ் அப் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ஐஒஎஸ் போன்களில் இருந்து வாட்ஸ் அப் சேட்களை சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் போன்களுக்கு பதிவிறக்கும் வசதியை கடந்த ஆண்டே வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய வசதியும் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,518FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...