health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்நோய், மூர்ச்சை தெளிய, மாந்தம், சேற்றுப்புண், சொட்டு சிறுநீர்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

பல் நோய் சரியாக…

தினசரி காலை பல் துலக்கியவுடன் ஒரு நெல்விக் காயை நன்றாக மென்று தின்று வந்தால் பல் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் சரியாகி விடும்.

மூர்ச்சை தெளிய…

ஒரு சிவப்பு மிளகாயைச் சுட்டு அதன் நெடி மூக்கில் ஏறும்படி செய்யுங்கள். இதில் மூர்ச்சை தெளியாவிட்டால் கடுகை அரைத்து உள்ளங் காலில் தேய்த்து விடுங்கள். மூர்ச்சை உடனே தெளிந்து விடும்.

குழந்தைக்கு மாந்தம் சரியாக…

மாங்கொட்டைப் பருப்பை நெருப்பிலிட்டுச் சுட்டு சிறிது சுக்கையும் நெருப்பில் கருக்கி இரண்டையும் சேர்த்து தாய்ப்பால் விட்டரைத்து குழந்தையின் நாக்கில் தடவி வர மாந்தம் நீங்கி விடும்

சேற்றுப் புண் சரியாக…

இரவில் படுக்கப் போகும்போது கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்து பூசி வர நல்ல குணம் கிடைக்கும்.

சொட்டு மூத்திரம் சரியாக…

10 சண்பகப் பூவை எடுத்து 100 மி.லி. நீர் விட்டு கொதிக்க வைத்து காலை, மாலை குடித்து வர குடு தணிந்து நீர் தாராளமாக போகத் தொடங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.