டெக்னோ ஸ்பார்க் 8சி: சிறப்பம்சங்கள்..!

Techno Spark 8C - 2026

டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நைஜீரியா மற்றும் தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் கிரே, ஐரிஸ் பர்பில், மேக்னட் பிளாக் மற்றும் டர்கோயிஸ் சியான் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720×1,612 பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc T606 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

புதிய டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
உள்ளன.

மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 5000
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

மேலும் 4ஜி எலடிஇ, வைஃபை, புளூடூத், எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன்.

டெக்னோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் விரைவில்
இந்நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories