monkey - 2026

ஹைய்யோ இவரு என்னலாமோ பண்றாரு.. நான் வரலை இந்த விளையாட்டுக்கு…! குரங்கின் ரியாக்சன்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம் லைஃப் ஸ்டைல்
monkey - 2026

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

ஒரு உயிரியல் பூங்காவுக்கு செல்லும் ஒருவர் குரங்கிடம் காட்டும் மாய வித்தை மற்றும் அதற்கு அந்த குரங்கு காட்டும் ரியாக்ஷன் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்டது. டிக்டாக்கில் இந்த வீடியோவுக்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்கள் கிடைத்தன.

இந்த வீடியோ மெக்ஸிகோ நகரில் உள்ள சாபுல்டெபெக் மிருகக்காட்சிசாலையில் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகும்.

வீடியோவில் (Viral Video) , மெக்சிகன் உயிரியல் பூங்காவில், மாக்சிமிலியானோ இபார்ரா என்ற நபர் ஒருவர், கண்ணாடிக் கூண்டில் இருக்கும் ஒரு குரங்குக்கு மாய வித்தை ஒன்றை காட்டுகிறார்.

இந்த வித்தையைப் பார்த்த குரங்கு, முழுவதுமாக ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

வித்தையை கண்ணாடி வழியாக பார்த்து குரங்கு செய்யும் முக பாவங்கள் பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது.

அந்த நபர் தனது மேஜிக் வித்தைகளை தொடர்கிறார். வித்தைகளைக் காணும் குரங்கு ரசிக்கும்படியான பல முக பாவங்களைக் காட்டுகின்றது.

குரங்கால் தான் பார்ப்பதை நம்ப முடியவில்லை. தான் பார்த்தது உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ள குரங்கு ஜன்னல் அருகே நடந்து செல்கிறது.

அந்த நபர் தொடர்ந்து இன்னும் பல வித்தைகளைக் காட்டவே, குரங்கால் அதை தாங்க முடியவில்லை. இன்னும் சில நேரம் இந்த வித்தைகளைப் பார்த்தால், அதிர்ச்சியில் தனக்கு ஏதாவது ஆகிவிடும் என்பது போல, அது அங்கிருந்து செல்கிறது.

அந்த நபர் காட்டும் வித்தைகளுக்கு, குரங்கு (Monkey) காட்டும் ரியாக்ஷன் காண்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது, சிரிக்க வைக்கிறது. இந்த கியூட்டான வீடியோவுக்கு இதுவரை பலவித கமெண்டுகள் கிடைத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.