லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கூட்டாஞ்சோறு!

Published:

kutan choru - 2026

கூட்டாஞ்சோறு,(திருநெல்வேலி ஸ்பெஷல்).

1)புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)
2)துவரம்பருப்பு கால் கப்
3) புளி எலுமிச்சை அளவு
4)மிளகாய் வற்றல் நான்கு- ஐந்து
5)பெருங்காயம் கால் ஸ்பூன்
6) மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
7)கல் உப்பு – தேவைக்கு
8)தேங்காய் துருவல்- இரண்டு ஸ்பூன்
9)சின்ன வெங்காயம் 10
10)பூண்டு 5- 6 பல்
11)பெல்லாரி வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது).

காய்கறி ;

நறுக்கிய காய்கறி – ஒரு கப்: முருங்கைக்காய்-1, வாழைக்காய்-1, உருளைக்கிழங்கு-1 ,கத்திரிக்காய்-1, அவரைக்காய்-3, சீனி அவரைக்காய்4 ,கேரட்-1( சின்னது )

முருங்கைக்கீரை…ரெண்டு கைப்பிடி அளவு ஆய்ந்து வைத்துக் கொள்ளவும் .(நாட்டுக் காய்கள் மட்டுமே பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும்)

அரைக்க வேண்டியது :

மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு பொடியானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

வதக்க:

நறுக்கிய பெல்லாரி வெங்காயம்,,,, 2 மிளகாய் வத்தல் கிள்ளிப் போட்டது,,காயம் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும். .புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்

செய்முறை:

குக்கரில் அரிசி மற்றும் துவரம் பருப்பை தண்ணீர் விட்டு களைந்து போடவும்.. அதில் நறுக்கிய காய்கறிகள், கீரை முதலியவற்றை கழுவி சேர்க்கவும். .மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளியை அளந்து கொண்டு ஒரு கப் தண்ணீருக்கு 3 கப் கரைத்த புளி தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து அரைத்த மசாலாவையும் கலந்துகொண்டு அடுப்பில் வைக்கவும் (தண்ணீர் அளவு கூடவோ குறையவோ இல்லாமல் சரியாக இருந்தால்தான் பக்குவமாக வரும்)

வெயிட் போடும் முன் தீயை குறைத்து விட்டு குக்கரின் மூடியை திறந்து தேங்காய் துருவல் மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு மீடியம் தீயில் ஒரு விசில் வைத்து அணைக்கவும்.(தீயைக் கூட்டி வைத்தால் அடி பிடித்து விடும்)

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

நல்லெண்ணெய் 10 ஸ்பூன்… வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை( கொஞ்சம் அதிகமாக) போட்டு தாளிக்கவும். வெங்காய வடகத்தை உதிர்த்துக் கொண்டு தாளிப்பில் சேர்த்து கிளறினால் ,சுவை நன்றாக இருக்கும் .

Related articles

Recent articles

spot_img