health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தொடர் தும்மல், தாய்ப்பால், சிறுநீர் கடுப்பு, பவுத்திரம், இரத்தக்கொதிப்பு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

தொடர் தும்மலுக்கு…

கஸ்தூரி மஞ்சளைத் தூள் செய்து நெருப்பிலிட்டு அதனால் உண்டாகும் புகையை சுவாசிக்க தும்மல் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க…

கல்யாண முருங்கை இவையை பாசிப்பயறு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட்டு பாலையும் பருகி வர தாய்ப்பால் சுரக்கும்.

சிறுநீர் கடுப்புக்கு…

கரிசலாங்கண்ணி இலைச் சாற்றை காலையில் ஓர் அவுன்ஸ் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

பவுத்திரம் நீங்க…

மூலநோய் முற்றினால் பவுத்திரம் ஆகிவிடும். அரிசித் திப்பிலியை வறுத்து தூளாக்கி, சம அளவு குப்பைமேனி இலையை உலர்த்தி தூளாக்கி இரண்டையும் கலந்து காலை, மாலை சிறிது தூளை வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நாற்பது நாள்களில் குணமாகும்.

இரத்தக் கொதிப்பு நீங்க…

தினமும் காலையிலும் இரவிலும் மூன்று அல்லது நான்கு பூண்டுப் பற்களை வறுத்து சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.