
கூகுளில் நீங்கள் தேடும் அனைத்து தேடல் தொடர்பான விவரங்களும் பதிவாகிக் கொண்டே இருக்கும். ஹிஸ்டிரியில் டெலிட் செய்துவிட்டால், நீங்கள் தேடிய அனைத்தும் அழித்துவிட்டதாக நினைக்க வேண்டாம்
எந்த தகவல்களை தேடினாலும் அது தொடர்பான விவரங்கள், எவ்வளவு நேரம் இருந்தீர்கள், என்னென்ன பார்த்தீர்கள் என்பது உள்ளிட்ட தகவல்கள் கூகுளின் மை ஆக்டிவிட்டி (MY ACTIVITY) பக்கத்தில் பதிவாகியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களின் ஆன்லைன் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணி தான் MY ACTIVITY. நீங்கள் கூகுளை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து பல ஆண்டுகளாக உங்களின் தரவுகள் MY ACTIVITY-ல் சேகரிக்கப்பட்டு கொண்டிருக்கும்.
அதில் இருக்கும் தகவல்களை வைத்து நீங்கள் என்ன தேடினீர்கள், என்னென்ன பார்த்திருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.
மேலும், சில முக்கியமான தகவல்களை தேடி அது தொடர்பான தகவல்களை மறந்திருந்தாலும், கூகுளின் MY ACTIVITY பக்கத்துக்கு சென்று, தேடிய தகவல்கள் தொடர்பான விவரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேநேரத்தில், கடந்த காலங்களில் சங்கடங்கள் தரும் விவரங்களை தேடியிருந்தால், உடனடியாக கூகுளின் MY ACTIVITY பக்கத்துக்கு சென்று, அதனை நீக்கிவிடுங்கள். நாள் வாரியாக உங்களின் ஆன்லைன் தேடல் பதிவுகள் இருக்கும்
MY ACTIVITY பக்கத்தில் பதிவாகியிருக்கும் உங்களின் வரலாற்றை நீக்குவது மிகவும் எளிதான ஒன்று. அதில் தேடல் வரலாற்றை முதலில் கண்டுபிடியுங்கள். பின்னர், எந்த தேடல் தொடர்பான தகவலை நீக்க வேண்டும் என்பதை கிளிக் செய்து டெலிட் கொடுத்தால், அந்த தேடல் தொடர்பான விவரங்கள் முழுமையாக டெலிட் ஆகிவிடும்.
அதேநேரத்தில் மொத்தாக ஹிஸ்டிரியை நீக்க வேண்டும் என்று விரும்பினால், Search History பக்கத்தில் வலது பக்கத்தின் மேல் மூளையில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள். அதில், வரலாற்றை நீக்குவதற்கான தேதியை தேர்ந்தெடுத்து மொத்தமாக ஹிஸ்டிரியை டெலிட் செய்துவிடுங்கள்.




