விரைவில் இன்ஸ்டாவில் NFT: மார்க் அறிவிப்பு!

Instagram - 2026

பிரபல சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் NFT விற்பனையை விரைவில் துவங்க இருப்பதாக மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மெட்டா குழுமத்தின் தலைமையின் கீழ் இயங்கிவரும் இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் இந்த அப்ளிகேஷனில் NFT எனப்படும் Non Fungible Token ஐ விற்பனை செய்ய இருப்பதாக மெட்டா குழும தலைவர் மார்க் தெரிவித்து இருக்கிறார்.

இணைய உலகில் தற்போது வைரலாக பேசப்படும் விஷயம் இந்த NFT. உதாரணமாக நீங்கள் ஒரு படம் வரைகிறீர்கள். அதனை உங்களது வீட்டில் மாட்டுகிறீர்கள்.

உங்களுடைய புகைப்படத்தை போலவே உங்களது நண்பர் ஒருவர் வரைந்து விற்பனை செய்கிறார். ஆனால், அந்த ஓவியத்தின் உண்மையான உரிமையாளர் நீங்கள் தானே? இது பார்ப்பதற்கு எளிமையான விஷயம் போல தோன்றலாம்.

mark - 2026

ஆனால், இணையத்தில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் உள்ளன. அவற்றின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய நாம் மிகவும் சிரமப்பட வேண்டும்.

இதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த NFT தொழில்நுட்பம். இதன் மூலம் புகைப்படங்களை (உதாரணத்திற்கு) டிஜிட்டல் முறையில் உருவாக்கலாம். அதனை விற்பனையும் செய்யலாம்.

இது குறித்துப் பேசிய மார்க்,” NFT க்களை இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் கொண்டு வருவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

தற்போது அந்தத் திட்டம் குறித்து முழுமையாக என்னால் கூற இயலாது. ஆனால், விரைவில் இன்ஸ்டாகிராமில் மக்கள் தங்களது NFT விற்பனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.

சமீபத்தில் டிவிட்டர் நிர்வாகம் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு NFT புகைப்படங்களை புரொஃபைல் படமாக வைக்க அனுமதி கொடுத்துள்ளது.

அதேபோல, இந்தியாவைச் சேர்ந்த பயண முன்பதிவு நிறுவனமான ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனமும் வாடிக்கையாளர்கள் தங்களது NFT மூலமாக பயண முன்பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமிலும் NFT களை விற்பனை செய்யலாம் என அந்த நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்து இருப்பது இணையவாசிகளை குஷிப்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories