கேலக்ஸி A53 5ஜி: சிறப்பம்சங்கள்..!

Published:

Galaxy A53 5G - 2026

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மாரட்போன் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய சாம்சங் கேலக்ஸி A53 5ஜி மாடலில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ 120Hz FHD+ சூப்பர் AMOLED ஸ்கிரீன், சாம்சங் எக்சைனோஸ் 1280 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேலக்ஸி A53 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 12 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP டெப்த் சென்சார், 5MP மேக்ரோ கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A53 5ஜி அம்சங்கள்:

  • 6.5 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி ஒ 120Hz டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
  • மாலி-G68 GPU
  • 6GB ரேம், 128GB மெமரி
  • 8GB ரேம், 256GB மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
  • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
  • 64MP பிரைமரி கேமரா
  • 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
  • 5MP டெப்த் சென்சார்
  • 5MP மேக்ரோ கேமரா
  • 32MP செல்ஃபி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • சாம்சங் பே
  • யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
  • யு.எஸ்.பி. டைப் சி
  • 5000mAh பேட்டரி
  • 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

விலை விவரங்கள்:

சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், வைட், லைட் புளூ மற்றும் பீச் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 499 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற வருகிறது. இதன் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி தொடங்குகிறது.

புதிய கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு வங்கி சார்ந்து ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் அல்லது ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img