தக்காளிக்கு மவுசு கூடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் காய்கறிகள், கீரை மற்றும் கிழங்கு வகைளின் மகத்துவத்தை நகைச்சுவையாகக் கூறி பட்டியலிடும் பாடல் இது.
“ஆஹா தங்கமே தங்கம் தங்கமே தங்கம் தக்காளிப் பழமே”. திரைப்படம்: அன்புவழி (1968); பாடலாசிரியர்: தெள்ளுர் தருமராஜன் (இவர் வேறு ஏதாவது திரைப்படப் பாடல்களை எழுதினாரா என்று தெரியவில்லை). இசையமைப்பு: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
தக்காளி, வெங்காயம், அரைக்கீரை, சிறுக்கீரை, அகத்திக்கீரை, சுக்காங்கீரை, புளிக்கீரை புதினாக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முள்ளங்கி, பூசணி, புடலங்காய், வெண்டைக்காய், கொத்தமல்லி, இஞ்சி, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கோவைப்பழம், கருணைக்கிழங்கு என்று வரிசையாக அடுக்கி அசல் காய்கறி விற்பனைக்காரராகவே மாறி கூவிக்கொண்டு பாடும் இசையரசர் டி.எம்.சௌந்தரராஜனின் பின்னணிக்கு குரலுக்கு தள்ளுவண்டியிலே இத்தனையையும் வைத்து விற்பனை செய்ய வந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் எல்.விஜயட்சுமி மற்றும் அவர்களின் தோழிகளை கேலி செய்துகொண்டு துள்ளாட்டத்துடன் பாடும் காட்சியை பார்த்து கேட்டு மகிழலாம்.
— டாக்டர் ராகவன், மதுரை