January 25, 2025, 8:47 AM
23.2 C
Chennai

பரிதவிப்பது பாஜக வா? கோவையா?

#image_title

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக கோவையின் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் “முதலாளிகளுடன்” தொழில் ரீதியான தொடர்பில் இருப்பவன் நான்.

பூனா மற்றும் கோவையின் தட்பவெப்பநிலை கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பூனாவையும் இன்றைய பூனாவையும் கோவையுடன் ஒப்பிட்டால் பூனா அடைந்த தொழில் வளர்ச்சியில் கால் பங்கு கூட கோவை அடையவில்லை. அதற்கு காரணம் கோவையில் “professional approach” என்பது கிடையாது. அங்குள்ளவர்கள் professionalism மற்றும் proprietorship என்ற இரண்டுக்கும் இடையில் நாற்பது ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை professional போல் காண்பித்துக் கொண்டு முதலாளிகளாகத்தான் நடந்து கொள்வார்கள். முதலாளியைத் தவிர வேறு யாரும் எந்த முடிவும் கருத்தும் சொல்ல முடியாது.

பூனா இன்றைக்கு இந்தியாவின் Detroit city. அத்துடன் ஐடி நிறுவனங்கள், பொறியியல் நிறுவனங்கள் என்று கொடிகட்டிப் பறக்கிறது. பூனாவில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் நல்ல பதவிகளில் காண முடியும். கோவையில் நீங்கள் இதைப் பார்க்க முடியாது. சில நிறுவனங்களில் நல்ல ஒரு Executive வந்து நிறுவனத்தை திறம்பட நடத்துவார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரை துரத்தி விடுவார்கள், அங்குள்ள தொழிலாளிகள் பலரிடம் காரணம் கேட்டபோது அவர்கள் சொன்னது வியப்பாக இருந்தது. “சார், ஓனர் இன் செக்யூரிட்டியா ஃபீல் பண்ணுவார் சார், அதுனால ஏதாவது காரணம் சொல்லி வேலையில் இருந்து தூக்கிருவாங்க சார்”

ஒரு தொழில்முறை அணுகுமுறை இருந்திருந்தால் ஒரு பெரிய நாட்டின் நிதியமைச்சருடன் புத்திசாலித்தனமான முறையில் தன்னுடைய வாதங்களை முன்வைத்திருக்க முடியும். Facts and Figures உடன் ஒரு convincing presentation கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு முதலாளித்துவ மனப்பான்மையுடன் ஏளனப் பேச்சை எந்த ஒரு Professional Entrepreneur ஆக இருப்பவர் நிச்சயம் செய்யமாட்டார்.

இது ஒரு தனிப்பட்ட மனிதரின் பிரச்சினை இல்லை கோவையின் Professional Industrial approachல் இருக்கும் குறை!

ALSO READ:  பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்த நிகழ்வுக்காக பல நாட்கள் மெனக்கெட்டு, பல துறைகளின் அதிகாரிகள் வந்து அதிகப்படியான நேரத்தை செலவிட்டு பல முன்னெடுப்புகளை எடுத்திருந்தார்கள். இது போன்ற ஒரு வாய்ப்பு சென்னைக்கோ அல்லது பெங்களூர், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கோ கிடைத்திருந்தால் அங்கிருக்கும் தொழிலதிபர்கள் பலவற்றை சாதித்திருப்பார்கள். ஆனால் இங்கே கோட்டை விட்டிருப்பது கோவை.

இதை பாஜக அரசியல்வாதிகள் கூட சில நாட்களில் மறந்து விடுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் மோசமானவர்கள், வேறு ஆட்சி வந்தாலும் கூட இந்த அனுபவத்தை மறக்க மாட்டார்கள். இப்படி தான்தோன்றித்தனமாக பேசுவது என்ன ஸ்டைல் என்றே புலப்படவில்லை.

ஒருவேளை கோவையில் இந்த மெனக்கெடலை திராவிட ஈகோ சிஸ்டம் காலி செய்ததா, அதற்கு ஒரு தனி நபரை பயன்படுத்தியிருக்குமோ என்ற ஐயமும் எழாமலில்லை. அப்படி இருந்திருந்தாலும் ஒரு மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு எப்படி கொண்டு வருவது என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் போய்விட்டது.

ஆக, கோவை வளரவேண்டும் என்றால் அது தன்னுடைய தொழில் ரீதியான professionalism என்ற ஒன்றை கொண்டுவர வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த கொடீட்சியா பம்மாத்து எல்லாம் வேலைக்கு ஆகாது. அதுவரைக்கும் பரிதவிக்கத்தான் வேண்டும்!

ALSO READ:  சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 46: உத்யம ராகவந்யாய:

இனி பாஜகாவின் பரிதவிப்புகளைப் பார்ப்போம். எப்போதும் பொட் பொட்டென்று அடிக்கும் நிர்மலா சீதாராமன் ஏன் அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை. “I am here for serious business and don’t have time for sarcasm” என்று அப்போதே சொல்லி, கேட்டவர் முகத்தில் கரிபூசியிருந்திருக்கலாம். இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறியிருக்காது.

ஒரு வேளை அருகிலிருந்த அம்மையார் சமிக்ஞை எதுவும் செய்தாரோ என்னவோ? அண்ணாமலை என்ற ஆளில்லாத சமயத்தில் தன்னை ஒரு கோவையின் நலம் விரும்பி என்று காண்பிக்க உண்மையிலே வானதி எடுத்த சீரியசான முயற்சிகள் கடைசியில் பரிகாசத்திற்கு உள்ளானது தான் மிச்சம்.

கோவை எப்படி தொழில் ரீதியான அணுகுமுறைக்கும் முதலாளித்தனத்துக்கும் நடுவில் பரிதவிக்கிறதோ அதுபோல் பாஜகாவும் மென்மையான போக்கிற்கும் தடாலடி அரசியலுக்கும் இடையில் பரிதவிக்கிறது. முதலில் தடாலடி அரசியல் அணுகுமுறை தான் தமிழ்நாட்டில் எடுபடும் என்பதை தலைமை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அதிகப் பிரசங்கித்தனமான பேச்சிற்கு மன்னிப்பு கேட்டவுடன் “ஆமாம், அவருடைய கோரிக்கைகள் தவறில்லை, அவர் வெளிப்படுத்திய விதம் சரியானதாக இல்லை. அதை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்டார். அதை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இனிவரும் காலங்களில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தைரியமாக கூறியிருக்க வேண்டும். அதைக் கூறுவதற்கு யாருக்கும் பாஜகவில் திராணி இல்லை.

ALSO READ:  சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

முதலில் அவரை நேரில் சந்திக்க அனுமதி கொடுத்திருக்க கூடாது. அவரை ஒரு கடிதமாக அனுப்புங்கள் என்றோ அல்லது நீங்களே பொதுவெளியில் தெரிவித்து விடுங்கள் என்றோ கூறியிருக்க வேண்டும். இரண்டாவது முறை அவரை சந்திக்க வைத்தது நிதியமைச்சருடைய பொறுப்பு நிலையை கீழே இறக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் படிக்கப்போன அறிவாளி அந்த வீடியோவை வெளியிட்டு பிறகு நீக்கி மன்னிப்புக் கோருகிறார். எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் சபை நாகரிகம் இல்லாமல் பேசினார். அதற்கு பிராயச்சித்தம் கேட்கிறார். அதை வெளியிட்டதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

கழகங்களாக இருந்தால் தம்முடைய சார்பு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருந்திருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நித்தியானந்தா வீடியோவையே தொடர்ந்து ஒலிபரப்பியவர்கள். இதற்கிடையில் கட்சிக்காரர் ஒருவரையும் நீக்கியிருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளால் பாஜக.,வினர் தொழிலதிபர்களுக்காக எடுத்த சீரியசான முயற்சிகள் காணாமல் போய், நாங்க தான் தப்பு செஞ்சோம் நாங்கதான் தப்பு செஞ்சோம் என்று பாஜகவினரே தம்பட்டம் அடித்தது போலாயிற்று.

முதலில் தடாலடி அரசியலை தைரியமாகச் செய்யுங்கள். அப்போதுதான் தொண்டனுக்கே கட்சி மீது நம்பிக்கை வரும். இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும் கழகங்களுக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது.

அத்துடன் கோவைக்கு இது போன்ற முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வையுங்கள். They don’t deserve unless they become true Industrialists!”

  • அப்பாவி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.