சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களைப் போட்டு ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதில் நடிகைகள் கில்லாடிகளாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் இது ஒரு பொழுது போக்காகவே இருக்கிறது அவர்களுக்கு!
அரசியல் ரீதியாக கருத்துகளைப் போட்டு சிலர் சீரியஸ் திங்கர்ஸ் என வெளிப்படுத்திக் கொள்வதும் உண்டு. ஆனால் தங்கள் கவர்ச்சிப் படங்களைப் போட்டே ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியமும் சிலருக்கு கைவந்த கலைதான்!
நடிகை ராய்லட்சுமி அவ்வப்போது, வித்தியாசமான படங்களை டிவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அப்படி அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட ஒரு படம், லவ்வர்ஸ் என்ற வாசகங்களுடன் லவ்லியாக அமைந்திருந்தது. ரசிகர்கள் பலர் அதற்கு லைக் கொடுத்தும் ரிட்வீட் அடித்தும் வருகின்றனர்.
Strong women don’t have ‘attitudes’
We have standards 💖 pic.twitter.com/CzjnVvLM27— RAAI LAXMI (@iamlakshmirai) June 4, 2018





