நடிகை திரிஷா தற்போது கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ரோஜர்ஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர் விளையாட்டு மைதான கூரை மீது தொங்கியபடி பத்து நிமிடங்கள் போஸ் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிஷா, ரோஜர்ஸ் மைதானத்தில் 1,168 அடி உயரத்திலிருந்து 10 நிமிடம் பேஸ்பால் விளையாடுவதைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். மேலும் பயமில்லாதவர்கள் பக்கம்தான் விதி இருக்கும். அதனால் நான் எப்போதுமே சிங்கம்தான். என்று ஸ்மைலியுடன் மற்றொரு ட்வீட் பதிவும் போட்டிருக்கிறார்.
திரிஷாவின் இந்த தில்லான சாகசத்துக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அந்த உயரத்தைப் பார்த்ததும் தங்களுக்கு வயிறு கலக்கியதாகவும் கூறியுள்ளனர்.
And the best part bein able to watch a good 10 mins of baseball at the Rogers Stadium 1,168 ft. below me ? Scoreeeeeeee ?? pic.twitter.com/BBVWM8omOn
— Trish Krish (@trishtrashers) July 4, 2018




