ஜோதிகாவின் படத்துக்கு டப்பிங் பேசிய சிம்பு!

Published:

simbu2 - 2026

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் எஸ்டிஆர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார்.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கிறார்கள்!

இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன் திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது. அவர் வரும் சீன்களைக் கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி, இதில் நடித்துக் கொடுத்தாராம்.

டப்பிங் பேசி முடித்த சிம்பு தான் நடித்த காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக என்னை அழைத்துக் கூறினார். அவர் இந்தப் படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்தப் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார் தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img