நடிகர், நடிகைகள் என்றில்லாமல் பலருக்கும் இப்போது தங்கள் ஆதரவு வலிமையைக் காட்ட டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்கள் ஒரு கருவியாக உள்ளன. டிவிட்டரில் 5 ஆயிரம் பாலோயர்ஸ் இருந்தால் தான் ம.பி. தேர்தலில் நிற்பதற்கு சீட் என்று கறார் போட்டுள்ளது காங்கிரஸ் கட்சி!
முன்னர் படு பிஸியாக இருந்த பலரும் இப்போதும் படு பிஸியாக இருக்கின்றனர் சமூக ஊடகங்களில். நாட்டு நடப்பு, தங்களைப் பற்றிய தகவல்களை விளம்பரப் படுத்துவது, சமூக ஊடகங்கள் மூலமே வியாபாரம் செய்வது, வேலை வாய்ப்புகளைப் பெறுவது என்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நடிகை கஸ்தூரி இப்போது தானும் படு பிஸியாக சமூக ஊடகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று காட்டும் வகையில் ஒரு டிவிட்டினைப் பதிவு செய்துள்ளார். இரண்டு வருடங்களில் 10 ஆயிரம் டிவிட்கள் பதிவு செய்துள்ளார். வருடத்துக்கு சராசரியாக 5 ஆயிரம் என்றாலும், மாதத்துக்கு சராசரியாக 500 டிவிட்கள்… ஒரு நாளுக்கு சராசரியாக 15-18 டிவிட்கள். பகலில் சுமார் 12 மணி நேரம் டிவிட்டருடனேயே பயணித்தாலும், ஒவ்வொரு முக்கால் மணி நேரத்துக்கும் ஒரு பதிவு செய்கிறார் என்றால், அவரது சமூக விழிப்பும் நாட்டு நடப்பை அறிந்து கொண்டு பதிவிடும் திறனும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அவரது சந்தோஷப் பதிவு…
10k tweets in two years !! #tweetaholic pic.twitter.com/C3ro7tBHJr
— Kasturi Shankar (@KasthuriShankar) September 3, 2018




