
1. உங்கள் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவரா? உங்கள் நிறுவனம் எடுக்கும் திரைப்படங்கள் இந்துக் கடவுள் பூஜையுடன் தொடங்கப்படுகின்றனவா?
2. கடவுளை நம்புபவர் காட்டுமிராண்டி… முட்டாள்… அயோக்கியன் என்ற வாசகத்தில் கடவுள் என்பது அல்லாவையும், இயேசுவையும் குறிக்கிறதா..? கொஞ்சம் காதுகுளிர அல்லாவை வணங்குபவர் முட்டாள்… இயேசுவைக் கும்பிடுபவர் அயோக்கியர் என்று சொல்லுங்களேன்.
3. ஈழத் தமிழர்களின் இறுதிப் படுகொலையின்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மத்திய அமைச்சரவைப் பேரம் பேசிய தலைவர் கருணாநிதியின் சுறு சுறுப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
4. திருமாவளவன், கனி மொழி, டி.ஆர். பாலு போன்றோர் தமிழர் படுகொலையின் ரத்தக் கறைகூடக் காயாத ராஜ பக்ஸேவைச் சென்று சந்திக்கப் புறப்பட்டபோது அவர்களிடம் என்ன சொல்லி வழியனுப்பினீர்கள்?
5. வைகோ உங்களை தன்வாழ் நாளில் 90 சதவிகித காலம் முழுவதும் கேவலமாக, கடுமையாக விமர்சித்துப் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்போது உங்களை முதல்வராக்கியே தீருவேனென்று சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
6. ஆம்பூரில் காவலர்கள் மீதான தாக்குதல், விஸ்வரூபம் படத்தை வெளியிடவிடாமல் தடுத்துப் போராட்டம், இந்துத்துவர்கள் மீதான தொடர் படுகொலைகள், இஸ்லாமிய தீவிரவாதிகளின் சொகுசு சிறை வாழ்க்கை இவை பற்றி உங்கள் கருத்து என்ன?
7. நீங்கள் நடத்தும் பள்ளியில் ஆங்கிலம் தானே பயிற்று மொழி. அங்கு ஹிந்தியும் கற்றுத் தரப்படுகிறது அல்லவா? நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்கிறீர்கள்?
8. தமிழகம் திராவிட ஆட்சியில் இந்தியாவின் பிற மாநிலங்களைவிட பல வகைகளில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று அடி வயிற்றில் இருந்து கத்தப்படும் கூக்குரலை எப்படிப் பார்க்கிறீர்கள். உங்கள் தந்தையாரின் காலத்திலிருந்தே சொல்லப்படும் கோஷம் அது. எது உண்மை… தமிழகம் முன்னேறி இருக்கிறது என்பது உண்மையா..? வஞ்சிக்கப்படுகிறது என்பது உண்மையா? தமிழகம் வஞ்சிப்பட்டிருக்கிறது என்பதை ஏற்கிறீர்கள் என்றால் உங்கள் தீராவிடமே அதற்கு கூட்டுக் குற்றவாளி என்றும் ஆகுமல்லவா? வஞ்சிக்கப்படவில்லை என்பது உண்மையென்றால் இன்றைய பிரிவினைவாத சக்திகளிடம் ஓர் இந்தியனாக துணிந்து பதில் சொல்லவேண்டியதுதானே.
9. தமிழர்களின் மறை என்று திருக்குறளைச் சொல்கிறீர்கள். வள்ளுவம் கள்ளுண்ணாமையை வலியுறுத்துகிறது. உங்கள் அரசோ சாராயக்கடையை எடுத்து நடத்துகிறது. எங்கள் வள்ளுவர் உங்களுக்கு யார்..?
10. உங்களுடைய கட்சியின் எம்.எல்.ஏக்களில்/எம்.பிக்களில்/மாவட்டத்தலைவர்களில் / கவுன்சிலர்களில் தலித்துகள் எத்தனை பேர்/எத்தனை சதவிகிதம்?
(பின் குறிப்பு:
நண்பர்களுக்கு : அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் அனுப்பலாம்.
எதிர் தரப்புக்கு : கேள்வி கேட்கப்படுபவர் மட்டுமல்ல அவருடைய ஆதரவாளர்களும் கூட பதில் சொல்லலாம்.
அடுத்தது கமல் சாருக்கான கேள்விகள்)